பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் 23 வேட்பாளர் மனுக்கள் ஏற்பு

 

பெரம்பலூர், மார்ச்29: பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் 23 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டது. 23 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 18-வது நாடாளுமன்ற பொதுத்தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல்ஆணையத் தால் கடந்த 16 ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலையொட்டி கடந்த 20ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வந் தது. மனுதாக்கல் செய்ய 27 ம்தேதி கடைசி நாளாகும்.

இதனைத் தொடர்ந்து நேற்று 28 ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் 57 வேட்பு மனுக்கள் விநியோகிக்கப்பட்டிருந்தது. வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாளான 27ம் தேதிமட்டும் 28 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதன்படி 27ம் தேதி வரை 46 பேர் 56 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று 28ம் தேதி பெரம் பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முதல் தளத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் தனிப்பிரிவு அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் கற்பகம் தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில் வேட்புமனு தாக்கல் செய் திருந்த 46 பேரில் திமுக வேட்பாளர் கே.என்.அருண் நேரு, பகுஜன் சமாஜ் வேட்பாளர் இளங் கோவன், அதிமுக வேட்பாளர் சந்திரமோகன், பாஜ வேட்பாளர் பாரிவேந்தர், நாம் தமிழர் வேட்பாளர் தேன் மொழி உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகளின் வேட்புமனுக்கள் உட்பட மொத்தம் 23 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 23 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.நாளை 30ம் தேதி வரை மனுக்கள் வாபஸ் பெறலாம். இதையடுத்து இறுதி பட்டியல் வெளியிடப்படும்.

The post பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் 23 வேட்பாளர் மனுக்கள் ஏற்பு appeared first on Dinakaran.

Related Stories: