கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.2.9 கோடி பணம் பறிமுதல்

கோவை, மார்ச் 27: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி கோவை மாவட்டம் நிர்வாகம் சார்பாக தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் பறக்கும் படையினர் தினமும் தீவிர வாகனத் தனிக்கையில் ஈடுபட்டு முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் ரூ. 50 ஆயிரத்திற்கு மேலான ரொக்க பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி கோவை மேட்டுப்பாளையத்தில் ரூ. 5,52,650 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல சுலூரில் ரூ. 15,59,260, கவுண்டம்பாளையத்தில் ரூ.3,73,700, கோவை வடக்கு ரூ.12,08,600, தொண்டாமுத்தூரில் ரூ.7,16,500, கோவை கிழக்கில் ரூ.13,64,800, சிங்காநல்லூரில் ரூ.4,35,640, கிணத்துக்கடவில் ரூ.51,51,080, பொள்ளாச்சியில் ரூ.8,30,430, வால்பாறையில் ரூ.12,83,400 என மொத்தம் இதுவரை ரூ.2 கோடியே 9 லட்சித்து 46 ஆயிரத்து 60 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.2.9 கோடி பணம் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: