வெள்ளிங்கிரி மலை ஏறுபவர்களுக்கு வனத்துறையினர் அறிவுரை

 

கோவை, மார்ச் 26: கோவை இருட்டுப்பள்ளம் போலாம்பட்டி வனச்சரக அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: கோவை வனக்கோட்டம் பூண்டி வெள்ளிங்கிரி மலையில் கடந்த ஒன்றரை மாதங்களில் 5 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். எனவே வெள்ளிங்கிரி மலை ஏறும் பக்தர்களுக்கு தமிழ்நாடு வனத்துறையின் சார்பாக அறிவுரை வழங்கப்பட்டுள்ளன.

இருதய நோய் சம்பந்தப்பட்டவர்கள், மூச்சுத்திணறல், உடல் பருமன், நீரிழிவு நோய் உடையவர்கள், வயதில் மூத்தவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்தவர்கள் மலை ஏறவேண்டாம். வெள்ளிங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் மருத்துவரை சந்தித்து முழு உடல் பரிசோதனை செய்த பின் வெள்ளிங்கிரி மலைக்கு செல்ல வேண்டும். மலைக்கு செல்லும் பக்தர்கள் குழுவாக செல்ல வேண்டும். தனியாக செல்லக்கூடாது.

மலைக்கு சென்று உயிரிழப்புகள் ஏற்படும்போது அவர்களின் குடும்பம் மிகவும் பாதிக்கப்படுகிறது. இதனால் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். உயிரிழப்புகள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்படும் பட்சத்தில் அவர்களை மலை அடிவாரத்திற்கு கொண்டு வருவதற்கு வனத்துறைக்கு கடும் சவாலாக உள்ளது. எனவே அனைவரின் நலன்கருதி மேற்கொண்ட அறிவுறைகளை பொதுமக்கள் பின்பற்றி ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு வனத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வெள்ளிங்கிரி மலை ஏறுபவர்களுக்கு வனத்துறையினர் அறிவுரை appeared first on Dinakaran.

Related Stories: