எச்எம்எஸ் பஞ்சாலை தொழிலாளர் சங்க 87வது மாநாடு

 

கோவை, மார்ச் 26: கோவை ஜில்லா பஞ்சாலை தொழிலாளர் சங்க (எச்.எம்.எஸ்) 87-வது மாநாடு, தியாகி என்.ஜி.ஆர் 113வது பிறந்த நாள் விழா, மகளிர் தின விழா ஆகிய முப்பெரும் விழா கோவை சிங்காநல்லூர் ஸ்ரீசாய் விவாஹா மஹாலில் நேற்று முன்தினம் நடந்தது. எச்.எம்.எஸ். மாநில செயலாளரும், கோவை ஜில்லா பஞ்சாலை தொழிலாளர் சங்க தலைவருமான டி.எஸ்.ராஜாமணி தலைமை தாங்கினார்.

தமிழ் மாநில எச்.எம்.எஸ் தலைவர் மு.சுப்பிரமணியன் தொழிற்சங்க கொடி ஏற்றினார். சங்க செயலாளர் மற்றும் பொருளாளர் ஜி.மனோகரன் வரவேற்றார். எச்எம்எஸ் தேசிய தலைவர் சி.ஏ.ராஜாஸ்ரீதர், மாநில செயல்தலைவர் எம்.சுப்பிரமணியபிள்ளை, உடுமலை அரசு கலைக்கல்லூரி உதவி பேராசிரியர் டாக்டர் ஏ.கவிதா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இதில், ‘‘கோவை பாராளுமன்ற தொகுதியில் ‘’இந்தியா கூட்டணி’’ சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றிக்கு பாடுபட வேண்டும், என்.டி.சி. தொழிலாளர்களுக்கு முழு சம்பளம் கிடைக்க தொடர் போராட்டங்களில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டு தெரிவிப்பது, குறிப்பாக, சங்க தலைவர் டி.எஸ்.ராஜாமணிக்கு பாராட்டு தெரிவிப்பது, பிரதிமாதம் 10ம்தேதிக்குள் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், பஞ்சாலை தொழிலை வலுப்படுத்த வேண்டும்,

நலவாரிய இணைய சேவையை பாதிப்பின்றி வழங்க வேண்டும், அனைத்து அமைப்புசாரா நலவாரியங்களுக்கும் நிதி ஆதாரம் உருவாக்க வேண்டும்’’ என்பது உள்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில், நிர்வாகிகள் வீராசாமி, கணேசன், இருகூர் சுப்பிரமணியன், தர்மராஜன், கோவிந்தன், திருப்பதி, ஜீவா சண்முகம், ராஜா, ஆபத்சாகயம், பாதர்வெள்ளை, பி.சுப்பிரமணியம், நெல்லை மகாலிங்கம், கண்ணன், கோவிந்தன், செல்வராஜ், வெங்கடாசலபதி, முருகானந்தம், எம்.பழனிசாமி. பி.காளிமுத்து உள்பட பலரும் பேசினர். சங்க செயலாளர் கே.மோகன்ராஜ் நன்றி கூறினார்.

The post எச்எம்எஸ் பஞ்சாலை தொழிலாளர் சங்க 87வது மாநாடு appeared first on Dinakaran.

Related Stories: