பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் 108 பெண்கள் திருவிளக்கு பூஜை

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் 108 பெண்கள் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பெரியபாளையத்தில் புகழ் பெற்ற ஸ்ரீபவானி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா என பல்வேறு பகுதிகளில் இருந்து கார், பஸ், வேன், ஜீப், லாரி, ஆட்டோ, மாட்டு வண்டி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வந்து சனிக்கிழமை இரவு தங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை பொங்கல் வைத்து, மொட்டையடித்து வழிபட்டு வருவார்கள்.

நேற்று முன்தினம் பவானி அம்மன் கோயில் வளாகத்தில் பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. மாலை பெண்களின் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பெண்களுக்கு கோயில் சார்பில் பிரசாதம், மஞ்சள், குங்குமம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலர் அஞ்சன் லோகமித்ரா, செயல் அலுவலர் பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் 108 பெண்கள் திருவிளக்கு பூஜை appeared first on Dinakaran.

Related Stories: