ஹோலி பண்டிகை கொண்டாட்டம்

 

கோவை, மார்ச் 25: வடமாநிலத்தை சேர்ந்தவர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்று ஹோலி பண்டிகை. இந்த பண்டிகையின்போது வண்ண வண்ண பொடிகளை ஒருவருக்கு ஒருவர் பூசிக்கொண்டு நடனமாடி பாடல்கள் பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். இந்நிலையில், நடப்பாண்டில் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, கோவையில் பணியாற்றி வந்த வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் தங்களின் சொந்த ஊருக்கு சென்றனர்.

மேலும், கோவை சுக்கிரவார்பேட்டை, ஆர்.எஸ்.புரம், காந்திபுரம், வெரைட்டிஹால் ரோடு, சாய்பாபாகாலனி உள்ளிட்ட பகுதிகளில் வடஇந்தியர்கள் பலர் வசித்து வருகின்றனர். இவர்கள், ஹோலி பண்டிகையை நேற்று கோலாகலமாக கொண்டாடினர். அப்போது அவர்கள் ஒருவருக்கு ஒருவர் வண்ணப்பொடிகளை தூவி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பாடல்கள் பாடி பாரம்பரிய நடனமாடினர். இதில், குழந்தைகள், பெண்கள், வயதானர்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்றனர். மேலும், ஹோலி கொண்டாடத்தின்போது தங்களின் நண்பர்களுடன் சேர்ந்து போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

The post ஹோலி பண்டிகை கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: