கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் வருங்கால வைப்பு நிதி குறைதீர்ப்பு கூட்டம்

 

கோவை, மார்ச. 23: கோவை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் வைபவ் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் சார்பில் தொழிலாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான குறைதீர்ப்பு கூட்டம் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் வரும் 27ம் தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் நடைபெற உள்ளது.

அதன் விவரம் வருமாறு:
* யுனைடெட் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஏ பிளாக் வளாகம், 5-வது தளம், ஸ்டூடியோ ஹால், கூடலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், கோவை.
* எம்.எஸ்.அப்பரேல்ஸ், எண்.588, லட்சுமி நகர், முத்தன்னம்பாளையம், நல்லூர், திருப்பூர்.
* கோத்தகிரி பப்ளிக் பள்ளி, கோத்தகிரி, நீலகிரி மாவட்டம்.

மேற்கண்ட இடங்களில் நடைபெறும் இம்முகாமில், வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், இஎஸ்ஐ பயனாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களது குறைகளை மனுவாக எழுதி சமர்ப்பிக்கலாம். தனிப்பட்ட உறுப்பினர் அல்லது ஓய்வூதியம் பெறுவோரின் குறைகளை தீர்க்க அவர்களது ‘’யூஏஎன்’’ எண் அல்லது வைப்பு நிதி கணக்கு எண் அல்லது ஓய்வூதிய நியமன ஆணை எண் அல்லது இஎஸ்ஐ-ஐ.பி எண் அவசியம். மனுக்கள் உடனுக்குடன் பரிசீலனை செய்யப்பட்டு, உரிய தீர்வு காணப்படும். இந்த வாய்ப்பை அனைத்து தரப்பினரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

The post கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் வருங்கால வைப்பு நிதி குறைதீர்ப்பு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: