சோசியல் மீடியாக்களில் தேர்தல் விதிமீறல் கண்காணிப்பு

 

கோவை, மார்ச் 22: பேஸ்புக்கில் அரசியல் கட்சி, தலைவர்களை விமர்சித்து கமெண்ட் குவிவதால் கண்காணிக்க முடியாமல் தேர்தல் பிரிவு திணறுகிறது. தமிழகத்தில் அரசியல் கட்சியினரும், சுயேட்சை வேட்பாளர்களும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர். கட்சி, வேட்பாளர்கள் தொடர்பாக ஆன்லைனில் விதிமுறை மீறல் விவகாரங்களை கண்காணிக்க தேர்தல் கமிஷன் ‘மீடியா மானிட்டர்’ பிரிவை துவக்கி கண்காணிக்கிறது.

ஓட்டு கேட்டு குவியும் பதிவுகள், செல்போன் எஸ்.எம்.எஸ் போன்றவற்றையும், விதிமுறை மீறல்களையும் கண்காணிக்கும் மீடியா பிரிவினர், ‘பேஸ்புக்’ இன்ஸ்ட்டா, டுவிட்டர் பதிவுகளில் அரசியல் விளாசல்களால் ஆடிப்போய் விட்டனர். அரசியல் கட்சி தலைவர்களை வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் புனை பெயர்களுடன் சரமாரியாக கிண்டல் தகவல்களை பதிவிட்டு வருகின்றனர். சிலர் பேஸ்புக்கில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பதிவுகளை வெளியிடுவதும் அதிகமாகி விட்டது.

தினமும் பல ஆயிரம் அரசியல் கமெண்ட்டுகள் பேஸ்புக், டுவிட்டரில் பதிவாகிறது. இவற்றை கண்காணிக்க முடியாது. யாராவது புகார் தந்தால் விசாரிக்கலாம், ஓட்டு கேட்டு பல்க் மெசேஜ் யாராவது பதிவு செய்தால் அது தொடர்பாக விசாரணை நடத்தலாம், இப்போதைக்கு பேஸ்புக்கை முழுமையாக கண்காணிக்க முடியாது என மீடியா மானிட்டர் குழுவினர் தெரிவித்தனர்.

அரசியல் கட்சி, சுயேட்சை, கட்சி வேட்பாளர்களின் பேஸ்புக், இ மெயில் பதிவுகளை மீடியா குழு கண்காணிக்கிறது. இதேபோல் கட்சிகளின் வெப்சைட், பேஸ்புக், டுவிட்டர் மற்றும் ஐ.டி குழுவினரின் பேஸ்புக் பக்கங்களை மீடியா குழுவினர் ஒருங்கிணைத்து கண்காணித்து வருகின்றனர். ஓட்டு கேட்டு வெளியாகும் பதிவுகள் தேர்தல் கமிஷனிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

The post சோசியல் மீடியாக்களில் தேர்தல் விதிமீறல் கண்காணிப்பு appeared first on Dinakaran.

Related Stories: