மண்டல அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு குறித்த பயிற்சி

 

கோவை, மார்ச் 22: கோவை மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான தீவிரமாக பணிகள் நடந்து வருகிறது. மாவட்டத்திலுள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரம் ஆகியவை அனுப்பும் பணிகள் நடந்து வருகிறது. அதன்படி, 3,719 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 3,719 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 4,026 வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்களும் என மொத்தம் 11,464 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த சட்டமன்ற தொகுதிக்கு அனுப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கையாளுவது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வடக்கு மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ் தலைமையில் நேற்று நடந்தது. இதில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எப்படி பயன்படுத்துவது, கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், அதற்கான பொருட்கள், தேர்தல் நாளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. வடக்கு மண்டல அலுவலர்களுக்கான இப்பயிற்சியில் 22 பேர் பங்கேற்றனர். இவர்கள், வரும் 24-ம் தேதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post மண்டல அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு குறித்த பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: