பூதப்பாண்டி அருகே பரபரப்பு பள்ளி குடிநீரில் கழிவுகள் கலக்கப்பட்டதா?

*போலீசார் விசாரணை

பூதப்பாண்டி : பூதப்பாண்டி அருகே உள்ள அரசு ஆதிதிராவிடர் பள்ளி குடிநீர் தொட்டி தண்ணீரில் துர்நாற்றம் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பூதப்பாண்டியை அடுத்த தெள்ளாந்தி ஊராட்சிக்கு உட்பட்ட உடையடியில் ஆதி திராவிடர் நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 99 மாணவர்கள் படித்து வருகின்றனர். தலைமையாசிரியர் உட்பட 7 பேர் பணியாற்றி வருகின்றனர்.

இந்தநிலையில் இன்று காலை 10 மணிக்கு பள்ளி வகுப்புகள் தொடங்கின. அப்போது மாணவர்கள் சிலர் குடிநீர் பைப்பை திறந்து தண்ணீர் குடிக்க முயன்றபோது துர்நாற்றம் வீசியுள்ளது. இது குறித்து உடனடியாக மாணவர்கள் தலைமையாசிரியருக்கு தகவல் தெரிவித்தார்.அவர் பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரித்தபோது குடிநீரில் துர்நாற்றம் வீசுவது தெரியவந்தது. இந்த பள்ளியில் 4 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் உள்ளன. இவற்றுக்கு தெள்ளாந்தி ஊராட்சி மூலமே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

4 தொட்டிகளில் ஒன்றில் உள்ள தண்ணீர் மட்டுமே துர்நாற்றம் வீசி வருகிறது. குடிநீரில் கழிவுகள் ஏதாவது கலக்கப்பட்டுள்ளதா என தெரியவில்லை. இதையடுத்து அந்த தொட்டியில் உள்ள தண்ணீரை கீழே திறந்து விட்டுள்ளனர். ேமலும் சுகாதார அதிகாரிகளும் சம்பவ இடம் வந்து குடிநீரின் மாதிரியை சேகரித்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்ைபு ஏற்படுத்தி உள்ளது.

The post பூதப்பாண்டி அருகே பரபரப்பு பள்ளி குடிநீரில் கழிவுகள் கலக்கப்பட்டதா? appeared first on Dinakaran.

Related Stories: