சமூகத் தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்

தண்டராம்பட்டு, மார்ச் 3: தண்டராம்பட்டு அடுத்த நாராயணகுப்பம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் 2022-23ம் நிதி ஆண்டில் ஏரி தூர்வாருதல், குளம் தூர்வாருதல், பக்க கால்வாய் அமைத்தல், கசிவு நீர் குட்டை அமைத்தல், தனி நபர் கழிவறை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றது. இந்த பணிகளை சமூக தணிக்கை அலுவலர், மகளிர் குழு உறுப்பினர்கள் வீடு வீடாக சென்று பணி செய்த இடங்களுக்கு சென்று பணிகளை ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தயாரித்தனர். தொடர்ந்து, நேற்று ஊராட்சி மன்ற தலைவர் ரவி சந்திரன் தலைமையில் மாரியம்மன் கோயில் வளாகத்தில் சமூக தணிக்கை கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில், துணை பிடிஓ சிவகுமார், வார்டு உறுப்பினர்கள், சமூக தணிக்கை அலுவலர்கள், மகளிர் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

The post சமூகத் தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: