தேசிய நெடுஞ்சாலையில் தொடர் விபத்து ஏற்படும் இடங்கள் சென்னை மண்டல போக்குவரத்து ஐஜி ஆய்வு செங்கம் பகுதியில்

செங்கம், ஜூலை 23: செங்கம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் தொடர் விபத்து ஏற்படும் இடங்களை சென்னை மண்டல போக்குவரத்து ஐஜி மல்லிகா பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த பக்கிரிபாளையம் முதல் மேல்செங்கம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சில மாதங்களில் பலமுறை வாகன விபத்துகள் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்துகளில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதிக போக்குவரத்து, வளைவு பகுதிகள், இருள்சூழ்ந்து மின்விளக்கு எதுவும் இல்லாதது, வாகனங்கள் அதிவேகமாக செல்வது, சாலை விதிகளை கடைபிடிக்காமல் வாகனங்களை ஓட்டிச்செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் நடக்கிறது. இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் தொடர் விபத்துகளை தடுக்கும் வகையில் சென்னை மண்டல போக்குவரத்து போலீஸ் ஐஜி மல்லிகா நேற்று, தொடர் விபத்து ஏற்படும் இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, செங்கம் டிஎஸ்பி தேன்மொழி வெற்றிவேலிடம் விவரங்களை கேட்டறிந்தார். விபத்து ஏற்படாமல் தடுக்க தமிழக முதல்வரிடம் ஆய்வறிக்கையை அளித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அப்போது, இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

The post தேசிய நெடுஞ்சாலையில் தொடர் விபத்து ஏற்படும் இடங்கள் சென்னை மண்டல போக்குவரத்து ஐஜி ஆய்வு செங்கம் பகுதியில் appeared first on Dinakaran.

Related Stories: