கெஜ்ரிவால் ஆட்சியில் டெல்லி குடிநீர் வாரிய ஊழலின் மொத்த மதிப்பு ரூ.70,000 கோடி: ஒரு முறை தீர்வு திட்டம் இன்னொரு மெகா ஊழல்

* முறைகேட்டின் கூடாரம் டிஜேஎல்: பாஜ விமர்சனம்

புதுடெல்லி: கெஜ்ரிவால் தலைமையிலான அரசின் கீழ் டெல்லி குடிநீர் வாரியம் ஊழலின் கூடாரமாக மாறிவிட்டதாக பாஜ செய்தி தொடர்பாளர் ெசஷாத் பூனாவாலா குற்றம்சாட்டியுள்ளார். மேலும், குடிநீர் இணைப்பு பெற்றுள்ள நுகர்வோருக்கான ஒரு முறை தீர்வு திட்டத்துக்கு கெஜ்ரிவால் ஆதரவு என்பது ‘இன்னுமொரு சூப்பர் ஊழல்’ என்பதை தவிர வேறில்லை என்றும் விமர்சித்தார். இதுபற்றி பாஜ செய்தி தொடர்பாளர் ெசஷாத் பூனாவாலா தெரிவித்ததாவது: ஆம் ஆத்மிஅரசு கமிஷன் மற்றும் லஞ்சம் பெறுவதற்காக கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டம் பல மடங்கு தொகையை உயர்த்தி ஒப்பந்தங்களை வழங்கியது. ஒரு முறை தீர்வு திட்டத்துக்கு கெஜ்ரிவால் ஆதரவு அளிப்பதும் இந்த அடிப்படையில் தான். இத்திட்டம் ‘இன்னுமொரு சூப்பர் ஊழல்’ என்பதை தவிர வேறில்லை.டெல்லி குடிநீர் வாரியத்தில் நடைபெற்ற ஊழல் என்பது ரூ.70,000 கோடி அளவுக்கு இருக்கும்.

குடிநீர் இணைப்பு பெற்றவர்களுக்கு கட்டணச் சலுகை தருவதாக இருந்தால் அனைவருக்கும் தரலாம். அதில் தவறில்லை. ஆனால், ஒரு முறை தீர்வு திட்டத்தை மக்களவை தேர்தலுக்கு முன்பாக கொண்டு வருவதன்நோக்கம், கமிஷன் பெறுவதற்காக மட்டும் தான். குடிநீர் வாரியம் தற்போது ஊழலின் கூடாரமாக மாறியுள்ளது. முந்தைய ஷீலா தீட்சித் ஆட்சியிலும் இதே குடிநீர் மீட்டர்கள் தான் பயன்படுத்தப்பட்டன. அப்போது பேசிய ஆம் ஆத்மி தலைவர்கள்.தாங்கள் ஆட்சிக்கு வந்தால் முந்தைய நடைமுறைகள் மாற்றப்பட்டு புது சாப்ட்வேர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று கூறினர். ஆனால், இதுவரை ஒன்றும் நடக்கவில்லை. இவ்வாறு கூறினார்.

The post கெஜ்ரிவால் ஆட்சியில் டெல்லி குடிநீர் வாரிய ஊழலின் மொத்த மதிப்பு ரூ.70,000 கோடி: ஒரு முறை தீர்வு திட்டம் இன்னொரு மெகா ஊழல் appeared first on Dinakaran.

Related Stories: