ரதசப்தமி பிரமோற்சவம் நிறைவு பஞ்சமூர்த்திகள் மாடவீதிகளில் பவனி செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயிலில்

செய்யாறு, பிப்.20: செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயிலில் ரதசப்தமி பிரமோற்சவ விழா நிறைவுபெற்றது. இதையொட்டி பஞ்சமூர்த்திகள் மாடவீதிகளில் பவனி வந்த பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற 8வது திருத்தலமான பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோயிலில் ரத சப்தமி பிரமோற்சவ விழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று காலை சுவாமிக்கு பகல் அபிஷேகம், கேடய உற்சவமும், இரவு கற்பக விருட்சம், காமதேனு, மயில், மூஷிக, ரிஷப வாகன பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதிஉலா நடந்தது. நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வாக 7ம் நாள் தேரோட்டம் விமரிசையாக நடந்தது. ேமலும், 8ம் நாள் காலையில் சந்திரசேகர சுவாமி திருவீதி உலா வருதலும், இரவு குதிரை வாகன சேவை திருவீதி உலாவும் 9ம் நாள் பகல் பிட்சாடனர் உற்சவமும் பேட்டை வீதி வலமும், இரவு அபிஷேகமும் அதிகார நந்தி வாகன சேவையும் நடைபெற்றது.

இந்நிலையில், நேற்று முன்தினம் 10ம் நாள் காலை நடராசர் உற்சவம் வீதி உலாவும், மாலை தீர்த்தவாரியும், இரவு கொடி இறங்குதல் நிகழ்வும், ராவணேஸ்வர திருக்கயிலை சேவையில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு வான வேடிக்கையுடன் கோலாகலமாக நடந்தது. இதில் சுவாமி வேதபுரீஸ்வரர் ராவணேஸ்வரர் வாகனத்திலும், அம்பாள் பாலகுஜாம்பிகை காமதேனு வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் சிறிய ரிஷப வாகனத்திலும், முருகப்பக்ஷ பெருமான் மயில் வாகனத்திலும், விநாயகர் பெருமாள் மூஷிக வாகனத்திலும் அலங்காரத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்து சென்றனர் நேற்று முன்தினம் இரவுடன் ரதசப்தமி பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது. தொடர்ந்து பத்து நாட்கள் நடந்த விழா நாட்களில் தினமும் மாலை ஆலய சொற்பொழிவும், திருஞானசம்பந்தர் அரங்கத்தில் சமயத் தொண்டு மன்றத்தினரால் சமயச் சொற்பொழிவுயும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினரும் அந்தந்த திருவிழா விழா கமிட்டி நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

The post ரதசப்தமி பிரமோற்சவம் நிறைவு பஞ்சமூர்த்திகள் மாடவீதிகளில் பவனி செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயிலில் appeared first on Dinakaran.

Related Stories: