நாரவாரிகுப்பம் பேரூராட்சியில் குப்பைகள் குறித்து விழிப்புணர்வு

 

புழல்‌, பிப். 12: நாராவாரி குப்பம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் குப்பைகளை கொட்ட கூடாது என எச்சரிக்கை துண்டறிக்கை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நாரவாரிகுப்பம் பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் உள்ள வீடுகளில் சேரும் குப்பைகளை ஒருசிலர் அருகில் உள்ள காலி மைதானம் மற்றும் மின்சார ட்ரான்ஸ்பார்மர் கீழே ஆபத்தை உணராமல் கொட்டி வருகின்றனர். இதனால் அருகில் வீடுகளுக்கும், கடைகளுக்கும் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு தொற்று நோய்கள் பரவும் நிலை உள்ளது.

இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்தினர் தினசரி வாகனங்கள் மூலம் அனைத்து தெருக்களிலும் வந்து குப்பைகளை எடுத்துச் செல்கிறனர். வீடுகளில் இருக்கும் பொதுமக்கள் குப்பைகளை வாகனங்களில் வழங்குமாறு அறிவித்து இருந்த நிலையில், பேரூராட்சிக்குட்பட்ட 14வது வார்டு அறிஞர் அண்ணா தெரு, அங்காள பரமேஸ்வரி கோயில் பின்புறம் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் கீழே பொதுவெளியில் குப்பைகளை கொட்டி வருகின்றனர்.

இதனால் பல்வேறு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. ஒரு சில நேரங்களில் மின்சார தாக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும்.  எனவே, இந்த பகுதிகளில் குப்பைகளை கொட்டக் கூடாது என விழிப்புணர்வு சுவரொட்டி பேரூராட்சி சார்பில் 14வது வார்டு உறுப்பினர் இலக்கியன் மற்றும் சமூக ஆர்வலர்கள் மூலம் ஒட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவது தவர்க்கப்படும் என்றும், மீறி கொட்டினால் கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு செய்து செங்குன்றம் காவல்துறையிடம் புகார் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post நாரவாரிகுப்பம் பேரூராட்சியில் குப்பைகள் குறித்து விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: