தமிழ்நாடு, புதுச்சேரிக்கான இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இயக்குநராக அண்ணாதுரை நியமனம்

சென்னை:தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான இந்தியன் ஆயில் நிறுவன செயல் இயக்குநராகவும் மாநிலத் தலைவராகவும் அண்ணாதுரை நியமிக்கப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான இந்தியன் ஆயில் நிறுவன செயல் இயக்குநராகவும் மாநிலத் தலைவராகவும் அண்ணாதுரை பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் கிண்டி பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியராகவும் சென்னை பல்கலைக்கழகத்தில் நிதித்துறையில் எம்பிஏ பட்டமும் பெற்றார்.

மேலும் அண்ணாதுரை இந்தியன் ஆயில் நிறுவன மாநிலத் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொள்வதோடு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எண்ணெய் தொழில்துறைக்கான மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளராகவும் பொறுப்பேற்றுள்ளார். முன்னதாக குஜராத்தில் இந்தியன் ஆயில் நிர்வாக இயக்குநராகவும் மாநிலத் தலைவராகவும் பணியாற்றிய அண்ணாதுரை, பணிக் காலத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையின் முக்கிய பங்குதாரர்களுடனான தொடர்புகளில் சிறந்து விளங்கி உள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

The post தமிழ்நாடு, புதுச்சேரிக்கான இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இயக்குநராக அண்ணாதுரை நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: