திருப்பதி கோயிலில் அமைச்சர் ரோஜா முற்றுகை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் ரோஜாவை வாரி சேவா தன்னார்வலர்கள் முற்றுகையிட்டு ஜெய் அமராவதி என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பதியில் ஏழுமலையான் கோயிலுக்கு அமைச்சர் ரோஜா நேற்று காலை சுவாமி தரிசனத்திற்கு வந்தார். சுவாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வரும்போது கோயிலுக்கு வெளியே இருந்த பக்தர்கள், வாரி சேவா தன்னார்வலர்கள் அவருடன் புகைப்படம் எடுக்க திரண்டனர். அப்போது அமராவதி பகுதியில் இருந்து பக்தர்களுக்கு சேவை செய்ய வந்த பெண் வாரி சேவா தன்னார்வலர்கள் அமைச்சர் ரோஜாவை முற்றுகையிட்டு ஜெய் அமராவதி, ஜெய் அமராவதி என கோஷம் எழுப்பி அமைச்சர் ரோஜாவையும் ஜெய் அமராவதி என அழைக்கும்படி கூறினர்.

இதனை சற்றும் எதிர்பாராத அமைச்சர் ரோஜா அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்றார். இதுகுறித்து அமைச்சர் ரோஜா நிருபர்களிடம் கூறியதாவது: குடும்பங்களைக் பிரிப்பது சந்திரபாபுவுக்குக் கைவந்த கலை என்டிஆர் குடும்பத்தில் ஆரம்பித்து இன்று ஒய்.எஸ்.ஆர் குடும்பம் வரை எட்டியுள்ளது. இந்த வாய்ப்பை ஷர்மிளா கொடுத்தது தவறு.ஓட்டு போட்டால் ஒய்.எஸ்.ஆர் குடும்பம் நல்லது செய்யும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் உள்ளது. ஒய்எஸ்ஆர் ஆன்மாவை வருத்தப்படுத்தும் வகையில் ஷர்மிளா செயல்படுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

The post திருப்பதி கோயிலில் அமைச்சர் ரோஜா முற்றுகை appeared first on Dinakaran.

Related Stories: