பீகாரில் ரூ.7.89 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பாலம் திறப்பு விழாவுக்கு முன்பே இடிந்து விழுந்ததால் பரபரப்பு

பாட்னா: பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் ரூ.7.89 கோடி மதிப்பிலான மேம்பாலம் திறக்கும் முன்பே இடிந்து விழுந்தது. பக்ரா நதியில் பத்ரியா காட் பகுதியில் பாலம் திறப்பு விழாவுக்கு முன் சரிந்தது.

பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் பக்ரா நதியின் குறுக்கே ரூ.7.89 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வந்த பாலம் பாதி கட்டுமான பணியிலேயே இடிந்து விழுந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பீகார் மாநிலத்தின் இரண்டு பகுதிகளான பிளாக் ஏ மற்றும் பிளாக் பி ஆகியவற்றை இணைப்பதற்கான கட்டுமானப்பணி பாலம் அராரியா மாவட்டத்தில் கட்டப்பட்டு வந்த நிலையில் இன்று பாலப்பணிகள் நடைபெற்று வரும்போதே இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தான தகவல் இன்னும் வெளியாகவில்லை. மேலும் இந்த விபத்தில் யாரேனும் சிக்கியுள்ளனர் என்பது குறித்தான மீட்பு பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திறப்பு விழாவுக்கு முன்பே பல கோடி செலவில் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாலம் எப்படி இடிந்து விழுந்தது எனவும் தரமின்மையால் இந்த விபத்து நடந்ததா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post பீகாரில் ரூ.7.89 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பாலம் திறப்பு விழாவுக்கு முன்பே இடிந்து விழுந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: