கொலை மிரட்டல் காணொளி: சல்மான் கானுக்கு மிரட்டல் விடுத்து யூடியூபில் பதிவிட்டவர் கைது

மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டின் முன்பு கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தி இருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் யூடியூபில் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த ராஜஸ்தானை சேர்ந்த 25 வயது பன்வாரிலால், லதூர்லால், என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலியான பெயரில் யூடியூபில் கணக்கு தொடங்கி சல்மான்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து பதிவிட்ட காணொளியில் லாரன்ஸ் பிஷ்னோய், கோல்டி பிரார் உள்ளிட்ட பல தாதா கும்பலை சேர்ந்தவர்களுடன் தனக்கு தொடர்பு இருப்பதாகவும் சல்மான் கானை கொல்வது உறுதி என்றும் குறிப்பிட்டிருந்தார். இதை அடுத்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார் ஐபி முகவரியை கண்டுபிடித்து அதன் மூலம் செல்போன் எண்ணை ட்ரேஸ் செய்து ராஜஸ்தானில் அவரை கைது செய்தனர்.

The post கொலை மிரட்டல் காணொளி: சல்மான் கானுக்கு மிரட்டல் விடுத்து யூடியூபில் பதிவிட்டவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: