தமிழ்நாடு அரசுக்கு வைகோ வலியுறுத்தல் பழனி கோயில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும்

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஒருவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி மதி, “மாற்று மதத்தைச் சார்ந்தவர்கள் கோயிலுக்குள் அனுமதிக்க கூடாது, அவர்கள் சாமி தரிசனம் செய்ய விரும்பினால் கோயில் பதிவேட்டில், இந்த சுவாமியின் மீது நம்பிக்கை கொண்டு தரிசனம் செய்ய வருகிறேன் என உறுதிமொழி எழுதிக் கொடுத்த பின்பு அனுமதிக்கலாம்” என்று உத்தரவிட்டுள்ளார்.இத் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. இறை நம்பிக்கை உள்ளவர்கள், அவர்கள் விரும்பிய வழிப்பாட்டுத் தலங்களில் வழிபடுவது அவரது நம்பிக்கைக்கு உரியது. நாகூர் தர்காவிலும், வேளாங்கண்ணி மாதா கோயிலிலும் இந்துக்களும் பிற மதத்தினரும் வழிபட்டு வருகின்றனர். மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ள இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

The post தமிழ்நாடு அரசுக்கு வைகோ வலியுறுத்தல் பழனி கோயில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: