மக்களவை தேர்தல் தேதி விவகாரத்தில் போலி செய்திகளை நம்ப வேண்டாம்: தேர்தல் ஆணையம் உத்தரவு

புதுடெல்லி: மக்களவை தேர்தல் அறிவிப்பு பிப்ரவரி மாதம் இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து 2024ம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் ஏப்ரல் மாத மத்தியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த பல்வேறு தகவல்கள் அரசியல் கட்சிகள் சார்ந்தும், சமூக வலைதளங்களிலும் உலா வருகிறது.

இந்த நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் தரப்பில் ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், மக்களவை பொதுத்தேர்தல் தேதி குறித்து இதுபோன்று பரவும் செய்திகள் போலியானது என்பதால் அதனை பொதுமக்கள் உட்பட யாரும் நம்ப வேண்டாம். தேர்தல் ஆணையத்தால் தற்போது வரையில் தேர்தல் தேதிகள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அனைத்து பணிகளும் முடிவடைந்து தேர்தல் தேதி குறித்து முறையாக செய்தியாளர்களுக்கு அழைப்பு கொடுத்து வெளிப்படையாக அனைத்து விவரங்களுடன் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மக்களவை தேர்தல் தேதி விவகாரத்தில் போலி செய்திகளை நம்ப வேண்டாம்: தேர்தல் ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: