நீதிபதிகள் சுதந்திரமாக செயல்பட வேண்டும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல்

புதுடெல்லி: நீதிபதிகள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வலியுறுத்தியுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் 75வது ஆண்டு பவள விழாவையொட்டி,நேற்று நடந்த விழாவில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசுகையில், ‘‘ வழக்கறிஞர் தொழிலில் ஆண்கள் அதிகளவில் இருந்தனர். இதில் குறைவான பிரதிநிதித்துவம் பெற்றிருந்த பெண்கள், தற்போது மாவட்ட நீதித்துறையில் 36 சதவீதம் உள்ளனர்.

வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளில் பட்டியல் இன மக்கள் மற்றும் பழங்குடியினரின் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாக உள்ளது. மக்கள்தொகையின் பலதரப்பட்ட பிரிவினரும் சட்டத் தொழிலில் சேர வேண்டும். நிலுவையில் உள்ள வழக்குகள், ஒத்திவைப்பு கலாசாரம், நீண்ட கால விடுமுறைகள் போன்ற சிக்கல்களை நீதித்துறை சந்திக்கிறது.

எதிர்காலத்தில் இந்த பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும். சுதந்திரமான நீதித்துறை என்பது,சட்டமன்றம் மற்றும் நிர்வாக அதிகாரங்களில் இருந்து தனிமைப்படுத்தி கொள்வது அல்ல. நீதிபதிகள் தங்கள் கடமைகளை செய்வதில் சுதந்திரமாக இருக்க வேண்டும். சமூக மற்றும் அரசியல் அழுத்தங்களுக்கு அப்பாற்பட்டு தீர்ப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post நீதிபதிகள் சுதந்திரமாக செயல்பட வேண்டும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: