ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான திருத்தப்பட்ட தரவரிசை பட்டியல், மறு கலந்தாய்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: டிஎன்பிஎஸ்சி செயலாளர் கோபால சுந்தரராஜ் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய உதவி பொறியாளர் (நெடுஞ்சாலை, நீர்வளம், பொதுப்பணி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்), உதவி பொறியாளர் (சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்), முதலாள், தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் தானியங்கி பொறியாளர் (மோட்டார் வாகன பராமரிப்பு துறை) பதவிக்கான திருத்தப்பட்ட தரவரிசைப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வின் மறுகலந்தாய்வு வரும் 3, 4ம் தேதி பிராட்வே தேர்வாணைய அலுவலகத்தில் நடக்கிறது. சென்னை உயர் நீதிமன்றம் மேல்முறையீட்டு வழக்கின் பொது இறுதியாணையின் அடிப்படையில், முன்னர் வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியல் மற்றும் தரவரிசை பட்டியலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தெரிவு ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த மறுகலந்தாய்வில் பங்கேற்பதற்கான குறிப்பாணை தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான திருத்தப்பட்ட தரவரிசை பட்டியல், மறு கலந்தாய்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: