தொடர் மின்தடையை தவிர்க்க தாசில்தார் தலைமையில் ஆய்வு கூட்டம்

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரியில் வண்டலூர் தாசில்தார் தலைமையில் மதுவிலக்கு மற்றும் மின்தடை குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் வட்டத்தில் கூடுவாஞ்சேரி வண்டலூர் மற்றும் மாம்பாக்கம் ஆகிய குரு வட்டங்களில் 30க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் மற்றும் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி ஆகியவை உள்ளன. இந்நிலையில், கூடுவாஞ்சேரியில் தாசில்தார் புஷ்பலதா தலைமையில் வண்டலூர் வட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் மற்றும் மதுபானம் விற்பனை செய்வதை தடை செய்வது குறித்து ஆய்வு கூட்டம் நேற்று முன்தினம் மாலை நடந்தது.

இதில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு காவல்துறை துணை கண்காணிப்பாளர் சித்தார்த், கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், மண்டல துணை வட்டாட்சியர் ரமேஷ், தலைமை துணை வட்டாட்சியர் கோபி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், வண்டலூர் வட்டத்தில் அடங்கிய அனைத்து பகுதிகளிலும் கள்ளச்சாராயம் மற்றும் வீடுகளில் பதுக்கி வைத்து மதுபானம் விற்பதை தடை செய்வது குறித்து வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவி அலுவலர்கள் ஆகியோருக்கு அறிவுரை வழங்கினார். பின்னர், இது குறித்த விழிப்புணர்வு பேரணியை கூடுவாஞ்சேரியில் உள்ள வண்டலூர் தாசில்தார் அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கி கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம், நந்திவரம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளி வழியாக சென்று மீண்டும் தாசில்தார் அலுவலகம் வந்து நிறைவடைந்தது. இதில் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post தொடர் மின்தடையை தவிர்க்க தாசில்தார் தலைமையில் ஆய்வு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: