விவாகரத்து பெறாமல் பிரிந்து வாழும் கணவன், மனைவி பெயரில் தனித்தனி ரேஷன் கார்டுகள் வழங்க வேண்டும்: சிவகாசி எம்எல்ஏ கோரிக்கை


சட்டசபையில் நேற்று நடந்த கூட்டுறவு, உணவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் சிவகாசி எம்எல்ஏ (காங்கிரஸ்) அசோகன் பேசுகையில், வாடகை கட்டிடத்தில் இயங்கும் ரேசன் கடைகள் சொந்த கட்டிடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 1,000 அட்டைதாரர்களுக்கு மேல் உள்ள கடைகளை பிரித்து தர வேண்டும். அரிசி போன்ற ரேஷன் பொருட்களை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்ய வேண்டும் என்றார். அதற்கு பதில் அளித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் 25 கிலோ அரிசி மூட்டைக்கு மத்திய அரசு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கிறது என்றார். அப்போது குறுக்கிட்டு பேசிய பாஜ உறுப்பினர் வானதி சீனிவாசன், ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு மட்டும் முடிவு செய்வதில்லை. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எல்லா மாநில நிதி அமைச்சர்களும் கலந்து கொள்கிறார்கள்.

அப்போது கோரிக்கை வைத்திருக்கலாமே? என்றார். இந்தநேரத்தில் இந்த விவகாரத்தை மேலும் சிக்கலாக நான் விரும்பவில்லை” என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நகைச்சுவையாக கூறினார். இதைத்தொடர்ந்து உறுப்பினர் அசோகன் பேசுகையில், ஐரோப்பிய பாணியில் விவாகரத்து பெறாமல் சிலர் பிரிந்து வாழ்கிறார்கள். எனவே கணவன், மனைவி பெயரில் தனித்தனி ரேஷன் அட்டைகள் வழங்க வேண்டும் என்றார். உடனே, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசும்போது, கணவரிடம் கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்கு சென்றிருந்தால் எப்படி தர முடியும். சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றிருந்தால் மட்டும் வழங்க முடியும் என்றார்.

The post விவாகரத்து பெறாமல் பிரிந்து வாழும் கணவன், மனைவி பெயரில் தனித்தனி ரேஷன் கார்டுகள் வழங்க வேண்டும்: சிவகாசி எம்எல்ஏ கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: