சென்னையில் அமைக்கப்படுவதை போன்று தென் மாவட்டங்களை மையமாக கொண்டு ஒரு விளையாட்டு நகரம்: காங். எம்எல்ஏ ராஜேஷ்குமார் வலியுறுத்தல்


சட்டசபையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவரும், கிள்ளியூர் எம்எல்ஏவுமான ெச.ராஜேஷ்குமார் பேசியதாவது: கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை சிறப்பிக்கும் வகையில், ரூ.86 கோடி செலவில் முதற்கட்டமாக 420 கிராமப் பஞ்சாயத்துகளுக்கு, 546 விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு, மக்கள் தொகையின் அடிப்படையில் வழங்கப்பட்டதை பாராட்டுகிறேன்.

எஞ்சியுள்ள 10,793 கிராமப் பஞ்சாயத்துகளுக்கும் விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகள் விரைவில் வழங்க வேண்டும். மேலும், கிராமத்திலும் சரி, நகரத்திலும் சரி தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர், வீராங்கனைகளின் குடும்பச் சூழ்நிலைகளுக்கேற்ப தமிழ்நாடு அரசு அவர்களை தத்தெடுத்து, அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யுமானால், தமிழ்நாடு விளையாட்டுத் துறையில் மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தும். தென் மாவட்டங்களை மையமாகக் கொண்டு ஒரு விளையாட்டு நகரம் உருவாக்கப்பட வேண்டும்.

The post சென்னையில் அமைக்கப்படுவதை போன்று தென் மாவட்டங்களை மையமாக கொண்டு ஒரு விளையாட்டு நகரம்: காங். எம்எல்ஏ ராஜேஷ்குமார் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: