அயோத்தியில் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை குழந்தை ராமர் அணிந்துள்ள நகைகளின் விவரம்: ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை வெளியீடு

உத்தரப்பிரதேசம்: அயோத்தியில் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை குழந்தை ராமர் அணிந்துள்ள நகைகளின் விவரம் வெளியாகியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள, ராமர் கோயிலின் குடமுழுக்கு விழா நேற்றைய தினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் பிரபலங்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், நடிகைகள் கலந்து கொண்டனர். மேலும் கருவறையில் நிறுவப்பட்டுள்ள குழந்தை ராமர் சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு பூஜைகளை செய்து வழிபட்டார். கருங்கல்லில் செதுக்கப்பட்டுள்ள குழந்தை ராமர் சிலை கவனத்தை ஈர்த்துள்ளது. அயோத்தியில் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை குழந்தை ராமர் அணிந்துள்ள நகைகளின் மொத்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

குழந்தை ராமர் அணிந்துள்ள நகைகள் என்னென்ன?

அயோத்தியில் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை குழந்தை ராமர் அணிந்துள்ள நகைகளின் விவரம் வெளியாகியுள்ளது. சிலைக்கு அணிவிக்கப்பட்டுள்ள நகை விவரத்தை ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையே வெளியிட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயில் கருவறையில் பால ராமர் சிலை முன்பு, வெள்ளியால் செய்யப்பட்ட பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. 5 வயது குழந்தையாக கருதப்படுவதால் ராமர் விளையாட, சிலைக்கு முன்பு வெள்ளி பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. கிளுகிளுப்பு, யானை, குதிரை, ஒட்டகம், பொம்மை வண்டி மற்றும் பம்பரம் ஆகிய பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. ராமரின் தலையில் அணிவிக்கப்பட்டுள்ள தங்க கிரீடம் வட இந்திய பாரம்பரியத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கிரீடத்தில் மாணிக்கங்கள், மரகதம், வைரங்கள் பதிப்பு; மையத்தில் சூர்ய நாராயணரின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. கிரீடத்தின் வலது பக்கத்தில், முத்து இழைகள் நெய்யப்பட்டிருக்கின்றன்; இதன் எடை 1.7 கிலோ. பெரிய மாணிக்கம் மற்றும் வைரங்களால் அலங்கரிக்கப்பட்ட கௌஸ்துப மணி சிலையின் இதயத்தை அலங்கரிக்கிறது. அறக்கட்டளை வேதங்களின்படி, விஷ்ணுவின் அனைத்து அவதாரங்களும் இந்த ரத்தினத்தை தங்கள் இதயத்தில். ராமர் சிலை அணிந்துள்ள மிக நீளமான நெக்லஸின் பெயர் தான் விஜயமாலா. மாணிக்கக் கற்கள் பதித்த இந்த தங்க நெக்லஸ் வெற்றியைக் குறிக்கிறது. இது வைஷ்ணவ பாரம்பரிய சின்னங்களான சுதர்சன சக்கரம், தாமரை, சங்கு, மங்கள கலசம் உருவங்களை கொண்டுள்ளது. சிலைக்கு அணிவிக்கப்பட்டுள்ள மொத்த ஆரங்களின் (நெக்லஸ்) எடை மட்டுமே 3.7 கிலோ எடை ஆகும்.

ராமர் சிலைக்கு அணிவிக்கப்பட்ட மற்ற நகைகள் என்ன?

கழுத்தணிகளில் ஒன்று பிறை வடிவ காந்தா நகையாகும்; இது அதிர்ஷ்டத்தைக் குறிக்கும் மலர் வடிவமைப்பை கொண்டது. பதிகா என்பது தொப்புளுக்கு மேல் அணியும் மற்றொரு நெக்லஸ்; வைரம் மற்றும் மரகதத்தால் செய்யப்பட்ட 5 இழைகள் கொண்டது. காஞ்சி என்ற வைர, மாணிக்கங்கள், முத்துக்கள், மரகதங்களால் பதிக்கப்பட்ட விரிவான தங்க இடுப்புப் பட்டை அணிவிப்பு. தூய்மையின் அடையாளமாக சிறிய மணிகளை ராமர் அணிந்துள்ளார்; இதன் எடை 750 கிராம் ஆகும். ராமர் சிலை புஜ்பந்த் (கவசங்கள்), கங்கன் (வளையல்கள்) மற்றும் மோதிரங்கள் ஆகியவற்றை கொண்டுள்ளன. இந்த கவசங்கள் 400 கிராம் எடையிலும், வளையல்கள் 850 கிராம் எடையிலும் உருவாக்கப்பட்டுள்ளன. கைகளில் அணிந்துள்ள நகைகளின் எடை மட்டுமே 100 கிராம் என கணக்கிடப்பட்டுள்ளது.

இடது கையில் முத்து, மரகதத்தால் ஆன தங்க வில்; வலது புறம் அம்பு உள்ளது. 22 கேரட் தங்கத்தில் 400 கிராம் மற்றும் 500 கிராம் எடையிலான 2 தங்க கொலுசுகளும் ராமர் சிலைக்கு அணிவிக்கப்பட்டுள்ளன. ராமர் சிலையின் நெற்றியில் உள்ள வெள்ளி, சிவப்புத் திலகம் வைரம் மற்றும் மாணிக்கங்களால் உருவாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ராமர் சிலையின் கால்விரல் மோதிரங்கள் அனைத்திலும் வைரங்கள் மற்றும் மாணிக்கங்கள் பதிக்கப்பட்டுள்ளன. அத்யாத்மா, வால்மீகி ராமாயணம், ராம்சரித்மனாஸ், ஆளவந்தார் ஸ்தோத்திரம் நூல்களின் ஆராய்ச்சி அடிப்படையில் ஆபரணங்கள். ராமரின் மஞ்சள் நிற வேட்டியும் சிவப்பு நிற படகா/அங்காவஸ்திரமும் பனாரஸ் துணியால் நெய்யப்பட்டுள்ளது. வேட்டியில் சிக்கலான ஜரிகை, நூல் வேலைப்பாடுடன் கூடிய சங்கு சக்கரம் உள்ளிட்ட 4 உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அயோத்தி ராமர் சிலைக்கான ஆடை, ஆபரணங்களின் விலை சில கோடிகளை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

 

The post அயோத்தியில் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை குழந்தை ராமர் அணிந்துள்ள நகைகளின் விவரம்: ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: