டெல்லியில் கனமழை பெய்து வரும் நிலையில் விமானநிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து!

டெல்லி: டெல்லியில் கனமழை பெய்து வரும் நிலையில் விமானநிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. டெல்லியில் கனமழை பெய்து வருகிறது. இரவு முழுவதும் பெய்த தொடர் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆங்காங்கே மழைநீர் தேங்குவதால் டெல்லி நகரம் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், சுரங்கப்பாதைகளில் தேங்கியுள்ள தண்ணீரில் வாகனங்கள் சிக்கியதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். இந்நிலையில் டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1-ல் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.

கனமழை காரணமாக மேற்கூரை இடிந்து விழுந்ததில் நிறுத்தி வைத்திருந்த கார்கள் பலத்த சேதமடைந்தன. வாகனங்கள் மீது மேற்கூரை விழுந்ததில் 4 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து கனமழை பெய்து வரும்நிலையில், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. சுரங்கப்பாதைகளில் தேங்கும் தண்ணீரில் வாகனங்கள் சிக்கியதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். டெல்லி விமான நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து 4 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

The post டெல்லியில் கனமழை பெய்து வரும் நிலையில் விமானநிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! appeared first on Dinakaran.

Related Stories: