டெல்லியில் கனமழை 3 மணி நேரத்தில் 15 செ.மீ. மழை பதிவு: மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, விமான சேவை ரத்து

டெல்லி: டெல்லி விமான நிலையத்தின் ஒன்றாவது முனையத்தில் பிற்பகல் 2 மணி வரை விமான சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் பிற்பகல் 2 மணி வரை விமான சேவை நிறுத்தம்

டெல்லி விமான நிலையத்தின் ஒன்றாவது முனையத்தில் பிற்பகல் 2 மணி வரை விமான சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக டெல்லி விமான நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்திற்கு உள்ளானதில் ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேற்கூரை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதை அடுத்து ஒன்றாவது முனையத்தில் 2 மணி வரை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒன்றாவது முனையத்தில் இருந்து பயணிப்பவர்கள் 2, 3-வது முனையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

டெல்லியில் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

டெல்லியில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் டெல்லியின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. டெல்லியில் உள்ள முக்கிய சாலைகள், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் வெள்ளம் சூழ்ந்துள்ளன. டெல்லியில் அதிகாலையில் பெய்த கனமழை காரணமாக மெட்ரோ ரயில்சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் 3 மணி நேரத்தில் 15 செ.மீ. மழை பதிவு

டெல்லியில் பெய்து வரும் கனமழையால் இன்று அதிகாலை 3 மணி நேரத்தில் 15 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது.

The post டெல்லியில் கனமழை 3 மணி நேரத்தில் 15 செ.மீ. மழை பதிவு: மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, விமான சேவை ரத்து appeared first on Dinakaran.

Related Stories: