ரிலையன்ஸ் ஜியோவைத் தொடர்ந்து, ஏர்டெல் நிறுவனம் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்துவதாக அறிவிப்பு

டெல்லி: ரிலையன்ஸ் ஜியோவைத் தொடர்ந்து, ஏர்டெல் நிறுவனமும் தொலைபேசி கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. குறைந்தபட்ச மாத ரீ-சார்ஜ் தொகையை ரூ.20 உயர்த்தியது ஏர்டெல். ரூ.179லிருந்து ரூ. 199ஆக உயர்வு. தினசரி குறைந்தபட்சம் 1 ஜி.பி. டேட்டாவுடன் கூடிய மாத ரீ- சார்ஜ் ரூ. 265லிருந்து ரூ.299 ஆக அதிகரித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு செல்போன் நிறுவனங்களின் கட்டணங்கள் உயர இருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், ஏர்டெல் நிறுவனம் தமது செல்போன் சேவை கட்டணத்தை அதிரடியாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தொலைத்தொடர்பு சேவையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ, 4ஜி சேவைக்குள் அடியெடுத்து வைத்தபோது கட்டணங்களை அதிரடி சலுகையில் வழங்கியது. ஜியோவால் தங்கள் கட்டணத்தையும் குறைக்கும் நிலைக்கு மற்ற ஆபரேட்டர்களும் தள்ளப்பட்டனர். ஆனால், தற்போது விலை அதிகரிப்பிலும் மற்ற நிறுவனங்களுக்கு முன்னோடியாக மாறியுள்ளது. நாடு முழுவதும் செல்போன் கட்டணத்தை 10 முதல் 20% வரை உயர்த்தி ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. ஏர்டேல் இந்தப் புதிய கட்டண உயர்வு ஜூலை மூன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏர்டெல் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 399 ருபாயாக இருந்த மாதந்திர சேவைக்கான கட்டணம் தற்போது 449 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோன்று 499 ரூபாயாக இருந்த சேவைக்கான கட்டணம் 549 ரூபாயாகவும், 599 ரூபாய்க்கு வழங்கப்பட்ட சேவைக்கான கட்டணம் 699 ரூபாயாகவும், 999 ரூபாய்க்கு வழங்கப்பட்ட சேவைக்கான கட்டணம் 1199 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

The post ரிலையன்ஸ் ஜியோவைத் தொடர்ந்து, ஏர்டெல் நிறுவனம் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்துவதாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: