நாடாளுமன்ற தேர்தல் இந்தியா கூட்டணியில் முதல் தொகுதி உடன்பாடு: உபியில் சமாஜ்வாடி, ராஷ்ட்ரீய லோக்தளம் ஒப்பந்தம்

லக்னோ: நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜவை வீழ்த்த 28 எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை அமைத்துள்ளன. இந்த கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. சமாஜ்வாடி, ஆம்ஆத்மி, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் கட்சி அமைத்த குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இந்தநிலையில் இந்தியா கூட்டணியில் முதல் தொகுதி உடன்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிக தொகுதிகளான 80 தொகுதிகள் கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து அகிலேஷ்யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி மற்றும் ஜெயந்த் சவுத்திரி தலைமையிலான ராஷ்ட்ரீய லோக் தளம் இடையே நேற்று ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதை அகிலேஷ்யாதவ் தனது எக்ஸ் தளத்தில் உறுதிப்படுத்தினார். இந்தியா கூட்டணியில் உபி மாநிலத்தில் ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சிக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

The post நாடாளுமன்ற தேர்தல் இந்தியா கூட்டணியில் முதல் தொகுதி உடன்பாடு: உபியில் சமாஜ்வாடி, ராஷ்ட்ரீய லோக்தளம் ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Related Stories: