கீரனூர் அருகே விசலூரில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா

 

புதுக்கோட்டை, ஜன.14: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள குன்றாண்டார்கோவில் ஒன்றியம் கோவில் விசலூரில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா மற்றும் சமத்துவ பொங்கல் மற்றும் கலை பண்பாட்டு திருவிழா நடைபெற்றது. விழாவிற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் அந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிப்படனர்.

நிகழ்ச்சியில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களை சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டு பொங்கல் வைத்தனர். மேலும் நிகழ்ச்சியில் கிராமய நடனம், கிராமிய கும்மிபாடல்கள், மயிலாட்டம், குதிரையாட்டம், கிராமத்து காவல் தெய்வங்களின் காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் புதுக்கோட்டை நகர செயலாளர் செந்தில் , சேர்மன் போஸ், குண்றாண்டார்கோவில் மத்திய ஒன்றிய செயலாளர் குளவாய்பட்டி சண்முகம், ஒன்றிய செயலாளர் சேட்,, கீரனூர் நகர செயலாளர் அண்ணாத்துரை மற்றும் பொதுமக்கள், பெண்கள், திமுகவினர் ஏராளாமானோர் கலந்துகொண்டனர்.

The post கீரனூர் அருகே விசலூரில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா appeared first on Dinakaran.

Related Stories: