ஜமாபந்தி நிறைவு விழா 235 பேருக்கு சான்றிதழ்கள்: கோட்டாட்சியர் வழங்கினார்

 

திருவள்ளூர்: திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில் 235 பேருக்கு சான்றிதழ்களை கோட்டாட்சியர் வழங்கினார். திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 7ம் தேதி ஜமாபந்தி தொடங்கியது. வருவாய் கோட்டாட்சியரும், ஜமாபந்தி அலுவலருமான ஏ.கற்பகம் மனுக்களை பெற்று வந்தார். வட்டாட்சியர் செ.வாசுதேவன் முன்னிலை வகித்தார். இந்த ஜமாபந்தியில் 987 மனுக்கள் பெறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஜமாபந்தி நிறைவு விழா நேற்று நடந்தது. இதில், வட்டாட்சியர் செ.வாசுதேவன் தலைமை தாங்கினார். துணை வட்டாட்சியர்கள் கலைச்செல்வி, சந்திரசேகர், அம்பிகா, ஆதிலட்சுமி ஆகியோர் வரவேற்றனர். ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.ஜி.குணசேகரன், கே.ரவி ஒன்றிய கவுன்சிலர் த.எத்திராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோட்டாட்சியரும், ஜமாபந்தி அலுவலருமான ஏ.கற்பகம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வேதவல்லி ஆகியோர் 75 நபர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள், 93 பேருக்கு உட்பிரிவு பட்டாக்கள், 42 பேருக்கு பட்டா மாற்றம் சான்றிதழ்கள், 18 பேருக்கு கிராம நத்தம் பட்டாக்கள் மற்றும் 7 பேருக்கு ஜாதி சான்றிதழ்கள் ஆகியவற்றை வழங்கினார். மேலும் பட்டா மற்றும் ஜாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த மீதமுள்ள நபர்களுக்கு உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் கோட்டாட்சியர் ஏ.கற்பகம் தெரிவித்தார்.

இதில் ஊராட்சி தலைவர்கள் சேலை கோவர்த்தனன், கொல்லரம்பாக்கம் தமிழ்வாணன், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் மாவட்ட செயலாளர் எல்.கிருஷ்ணன், மாவட்ட அமைப்பு செயலாளர் விஸ்வநாதன், மாவட்ட துணை செயலாளர் குமரேசன், வட்டத் தலைவர் முனிரத்தினம் பிரதீப் குமார், வட்ட பொருளாளர் கவுஸ்பாஷா, துணைத் தலைவர் ஆனந்தன், த.சுகுமார்,

தனலட்சுமி, காயத்ரி, ராதிகா, ஜெயந்தி, உமா, பிரகாஷ், தயாநிதி குமரவேல் நந்தகுமார், ஜெகன் குமார், பரணி, கருப்பையா, குமரன், காதர் உன்னிஷா பேகம், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் மாநில துணைத் தலைவர் மாவட்டத் தலைவர் சசிகுமார், வட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் ஏ.சேகர், வட்டத் தலைவர் சீனிவாசன், வட்டப் பொருளாளர் சுப்பிரமணி, அண்ணாமலை, ஆனந்தகுமார், அன்பரசு, சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஜமாபந்தி நிறைவு விழா 235 பேருக்கு சான்றிதழ்கள்: கோட்டாட்சியர் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: