காட்டேரி அம்மனை வழிபாடு செய்வது எப்படி?

காடுகளில், காடுகளை ஒட்டிய கிராமங்களில், மக்களுக்கு பய உணர்வுகளே அதிகம் வரும். இயற்கை சீற்றங்களை, கொடிய விலங்கு , பாம்புகளை, பேய் பிசாசு போன்ற பயங்களோடு வாழவேண்டிய சூழ்நிலை, இவர்களுக்கு தெய்வநினைப்பு உருவங்களும் பயத்தையே தோற்றுவிக்கும். வட இந்தியாவில் புராணங்கள் வருவதற்கு முன்பேயே காளி அதாவது கருப்பு பெண் கோரமான உருவங்களையும் , ஆயுதங்களையும் கொண்டவள். தமிழ்நாட்டில் வனபேச்சி, வனபிடாரி, காட்டேரி, செல்லி, போன்ற பெண் தெய்வங்களை கோரவடிவமைப்பு செய்து பயங்களை, நோய்களை நீங்க வணங்கினர்.

சங்க காலத்திய பாடல் – வழிபாடுகள் :

காவல் தெய்வங்கள், பேய் பிசாசுகள் இரவில் தங்காமல் காடுகளில், இருட்டு கிராமங்களில் அலைந்து திரியும் என்பதே காட்டேரி அர்த்தம்.

இருசி என்பது காட்டேரியின் இன்னொரு பெயர். நல்லிருசி, பொன்னிருசி, குழி இருசி எனப் பலப்பெயர்கள் . வெவ்வேறு பகுதி மக்களும் தங்களுக்குத்தானே கதை பெயர்கள் வைத்து வழிபாடு செய்வர். இருசி (உட்காரு) பெண்கள் பருவமடையும் காலம் எனவும் எதிர்ப்பதமாக பருவமடைய அல்லது பூப்படையும் தன்மையில்லாத பெண் எனவும் பல அர்த்தங்கள், கதைகள்.

ஊட்டரு மரபின் அஞ்சு வரு பேய்க் கூட்டெதிர் கொண்ட விய்மொழி மிஞிலி புல்லிற்கு

ஏமம் ஆகிய பெரும் பெயர் வெள்ளித்தானை அதிகன் கொன்று உவந்து ஒள்வாள் அமலை ஞாட்பிற்

பாடலின் அர்த்தம் :

அதியனுக்கும் மிஞிலிக்கும் போர். அப்படி போர் நடந்து தனக்கு (மிஞிலி) வெற்றி தேடித்தந்தால் பெரும் பலி தருவேன் என பாழி நகரத் தெய்வத்தை வேண்டி, போர்க்களத்தில் மிஞிலி அதியனை வென்று அதியனை பேய் தெய்வத்திற்கு பலியிட்டு அமலைக் கூத்தாடினான் என பாடல் .

இவளை குலதெய்வமாய் வணங்குவோற்கு வெற்றியைத் தருவாள். பதிலுக்கு உயிர்பலி கேட்பாள். ஒரு வேளை பலியிடாமல் ஏமாற்றி விட்டால் , அவர்களது குடும்பத்தின் இளங்கருவை தின்பாள்.

அடிக்கடி கருச்சிதைவு ஏற்பட்டால் கிராமங்களில் இன்றைக்கும் முனி, காட்டேரி அடிச்சிடுச்சுன்னுதான் சொல்லுவாங்க. உடனே காட்டேரி வழிபாடு நடக்கும்.

காட்டேரி வழிபாடுகள் பழங்காலங்களில் கிராம காடு தெய்வங்களாக வழிபட்ட முறைகள் மேலே சொன்னவை. கோயில் அமைப்புகள் இல்லாமல், மரங்களின் கீழ், குளக்கரைகளில், கிராம எல்லைகளில் வழிபாடுகள் நடக்கின்றன.

மற்றும் பிற்காலங்களில் சிவபுராணங்களில் சிவனுடன் பார்வதியாக ஆக்கி பலவாறு கதைகள் உண்டாகின.

சமீப காலங்களில் கோயில்கள் வட தமிழ்நாடு, இலங்கை மற்றும் ஆங்கிலேயர்களால் புலம் பெயர்ந்த தமிழர்கள் வெளிநாடுகளில் காட்டேரியை வணங்குகின்றனர்.

The post காட்டேரி அம்மனை வழிபாடு செய்வது எப்படி? appeared first on Dinakaran.

Related Stories: