சில்லிபாயிண்ட்…

* முதல் அரையிறுதி
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டியில் நேற்று மகளிர் ஒற்றையர் காலிறுதி ஆட்டங்கள் நடந்தன. அதில் அமெரிக்க வீராங்கனை டாரியா சவில்லே(29வயது, 133வது ரேங்க்), சீனாவின் லின் சூ(29வயது, 33வது ரேங்க்) ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். அதில் டாரியா 3-6, 6-1, 6-4 என்ற செட்களில் வெற்றிப் பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். சுமார் 6 மாதங்களுக்கு பிறகு அரையிறுதி ஆட்டம் ஒன்றுக்கு டாரியா முன்னேறியுள்ளார். அவர், இன்று நடைபெறும் முதல் அரையிறுதியில் பெல்ஜியம் வீராங்கனை எலீஸ் மார்டின்ஸ்(28வயது, 29வது ரேங்க்) உடன் மோத உள்ளார்.

* ஆட்டம் ரத்து
தென் ஆப்ரிக்காவில் நடைபெறும் எஸ்ஏ20 டி20 கிரிக்கெட் தொடரில் முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் – ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத இருந்தன. ஜிகெபர்ஹாவில் நடைபெற இருந்த இந்த ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

* முதல் பட்டம்
இந்திய மல்யுத்த வீரர் அமன் ஷெராவத்(20) நேற்று குரோஷியாவில் நடந்த ரேங்கிங் சீரிஸ் மல்யுத்த போட்டியின் 57கிலோ எடை பிரிவில் துருக்கி வீரர் எம்.காரவுஸை 10விநாடிகளுக்குள் வீழ்த்தினார். கூடவே முழுமையாக 10 புள்ளிகளை பெற்ற அமன் புத்தாண்டை முதல் பட்டத்துடன் தொடங்கி உள்ளார். ஒலிம்பிக் கனவுடன் உள்ள அமனுக்கு இது உற்சாகம் தரும் வெற்றியாகும்.

* முதலில் தகுதிச் சுற்று
ஆஸி ஓபன் போட்டிக்கு முன்னதாக தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடக்கின்றன. மொத்தம் 3 சுற்றுகளாக நடைபெறும் இதில் இந்திய வீரர் சுமித் நாகல் முதல் 2 சுற்றுகளில் வெற்றிப் பெற்று 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இன்று நடைபெறும் இந்த இறுதி சுற்றில் ஸ்லோவாக்கிய வீரர் அலெக்ஸஅ மோல்கனை வீழ்ததினால் ஆஸி ஓபன் முதன்மை சுற்றில் களம் காணுவார் சுமித்.

The post சில்லிபாயிண்ட்… appeared first on Dinakaran.

Related Stories: