நிர்வாக பணி காரணங்களால் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களின் தேதிகள் மாற்றம்; காஞ்சிபுரம் கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம், ஜன.7: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்டத்தின்படி, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, நகரத்தினை சுற்றியுள்ள பஞ்சாயத்துகளில் முதற்கட்டமாக பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்று தீர்வு காணும் முகாம்கள் 03.01.2024 முதல் 30.01.2024 வரை நடைபெறுவதாக தெரிவித்து, 31.12.2023 அன்று பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டது. தற்போது, நிர்வாக காரணங்களினால் முகாம்கள் நடைபெறும் தேதிகள் 08.01.2024 முதல் 19.01.2024 வரை மாறுதல் செய்யப்பட்டு முகாம்கள் நடைபெறவுள்ளன. அதன்படி 8ம்தேதி, காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 11, 12, 13, 14, 15, 37 ஆகிய வார்டுகளுக்கு பிள்ளையார்பாளையம் செங்குந்தர் சத்திரத்திலும், சிறுகாவேரிப்பாக்கம் கிராம பஞ்சாயத்திற்கு காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், கீழ்கதிர்பூர் (ம) திருப்பருத்திக்குன்றம் கிராம பஞ்சாயத்துகளுக்கு ஏ.வி.ஆர். திருமண மண்டபத்திலும் நடைபெறுகிறது.

9ம்தேதி, மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 31, 32, 33, 35, 36, 45 ஆகிய வார்டுகளுக்கு பி.எம்.எஸ்.சாலம்மாள் திருமண மண்டபத்திலும், வையாவூர் கிராம பஞ்சாயத்திற்கு வி.பி.ஆர்.சி. கட்டிடத்திலும், வாலாஜாபாத் பேரூராட்சிக்கு டி.பி.எல். மகாலிலும் நடைபெறுகிறது. 10ம்தேதி, மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 38, 39, 40, 41, 42, 43, 44 ஆகிய வார்டுகளுக்கு லஷ்மி கோவிந்தராஜ் திருமண மண்டபத்திலும், கீழம்பி கிராம பஞ்சாயத்திற்கு காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், பெரும்புதூர் பேரூராட்சிக்கு வன்னியர் சத்திரத்திலும் நடைபெறுகிறது.

11ம்தேதி, உத்திரமேரூர் பேரூராட்சிக்கு ராஜேஸ்வரி திருமண மண்டபத்திலும், அய்யப்பன்தாங்கல் கிராம பஞ்சாயத்திற்கு சமுதாயக்கூடத்திலும், கெருகம்பாக்கம் கிராம பஞ்சாயத்திற்கு செல்வன் மகாலிலும் நடைபெறுகிறது. 12ம்தேதி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 46, 47, 48, 49, 50, 51 ஆகிய வார்டுகளுக்கு, தனலஷ்மி திருமண மண்டபத்திலும், கொளப்பாக்கம் கிராம பஞ்சாயத்திற்கு ஜெ.ஜெ மகாலிலும், முத்தியால்பேட்டை கிராம பஞ்சாயத்திற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் நடைபெறுகிறது. 13ம்தேதி, மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட 14 முதல் 27 வரையிலான வார்டுகளுக்கு கல்யாணி திருமண மண்டபத்திலும், மவுலிவாக்கம் கிராம பஞ்சாயத்திற்கு காவியா திருமண மண்டபத்திலும் நடைபெறுகிறது.

18ம்தேதி, குன்றத்தூர் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட 1 முதல் 15 வரையிலான வார்டுகளுக்கு, துலுக்கத் தெரு செங்குந்தர் திருமண மண்டபத்திலும், நடுவீரப்பட்டு கிராம பஞ்சாயத்திற்கு ஆதிதிராவிடர் நலப்பள்ளியிலும், திம்மசமுத்திரம், கருப்படிதட்டடை கிராம பஞ்சாயத்துகளுக்கு திம்மசமுத்திரம் சிவசக்தி மகாலிலும் நடைபெறுகிறது. 19ம்தேதி குன்றத்தூர் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட 16 முதல் 30 வரையிலான வார்டுகளுக்கு மேத்தா நகர், மேத்தாலீஸ்வரர் திருமண மண்டபத்திலும், புத்தேரி கிராம பஞ்சாயத்திற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post நிர்வாக பணி காரணங்களால் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களின் தேதிகள் மாற்றம்; காஞ்சிபுரம் கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: