காஞ்சிபுரம் அருகே கிழம்பியில் உள்ள திருமலை கல்லூரி பட்டமளிப்பு விழா: முன்னாள் டிஜிபி பங்கேற்பு

 

காஞ்சிபுரம், மே 25: காஞ்சிபுரம் அருகே கிழம்பி கிராமத்தில் உள்ள திருமலை பொறியியல் கல்லூரி நடைபெற்ற 20வது பட்டமளிப்பு விழாவில், முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு பங்கேற்றார். கீழம்பி கிராமத்தில் உள்ள திருமலை பொறியியல் கல்லூரியில் 20வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.

காஞ்சி கிருஷ்ணா கல்வி அறக்கட்டளை நிறுவனர் போஸ் தலைமை தாங்கினார். தாளாளர் அரங்கநாதன், தலைவர் ஜெயக்குமார், செயலாளர் வீரராகவன், பொருளாளர் மல்லிகா மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் மோகன்ராஜ் வரவேற்று பேசினார். இதில், சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு முன்னாள் போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு கலந்துகொண்டு, 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

அப்போது, மாணவ – மாணவிகள் பட்டங்களை பெற்று வீட்டுக்கும், நாட்டுக்கும், சமுதாயத்திற்கும் நீங்கள் பாடுபட வேண்டும், வெற்றிகளை பெற உழைத்து முன்னேற வேண்டும். இந்த பட்டங்களை பெற காரணமாக இருந்த பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் என அனைவருக்கும் நீங்கள் நன்றி உள்ளவராக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ – மாணவிகள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post காஞ்சிபுரம் அருகே கிழம்பியில் உள்ள திருமலை கல்லூரி பட்டமளிப்பு விழா: முன்னாள் டிஜிபி பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: