முதல்வர் கான்வாய் வழியில் ஆட்டோவில் சென்று இடையூறு: 4 டிரைவர்களிடம் விசாரணை

 

சோழிங்கநல்லூர், மே 24: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது முகாம் அலுவலகத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை நடைபயிற்சி ெசய்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். டிடிகே சாலை நட்சத்திர ஓட்டல் அருகே முதல்வரின் கான்வாய் சென்றபோது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரின் எச்சரிக்கையை மீறி, ஆட்டோ ஒன்று முதல்வரின் கான்வாய்க்கு இடையூறாக சென்றது. உடனே பணியில் இருந்த உதவி ஆய்வாளர் ஆரோக்கியராஜ், அந்த ஆட்டோவை துரத்தி சென்று மடக்கி விசாரணை நடத்தினார்.

அப்போது எழும்பூர் ரயில் நிலையம் ஆட்டோ நிறுத்தத்தில் ஆட்டோ ஓட்டி வரும் அரக்கோணத்தை சேர்ந்த ஜீவரத்தினம் (27), கோபிநாத் (27), கார்த்திகேயன் (33), மணிகண்டன் (29) என தெரியவந்தது. இவர்கள் 4 பேரும் மது போதையில் இருந்ததும் விசாரணயில் தெரியவந்தது. அதைதொடர்ந்து 4 பேரையும் உதவி ஆய்வாளர் ஆரோக்கியராஜ் தேனாம்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தார்.
அதன்படி போலீசார் ஆட்டோவை பறிமுதல் செய்து 4 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post முதல்வர் கான்வாய் வழியில் ஆட்டோவில் சென்று இடையூறு: 4 டிரைவர்களிடம் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: