செங்கல்பட்டு மாவட்டத்தில் அஞ்சல்துறை இன்சூரன்ஸ் முகவராக விண்ணப்பிக்கலாம்: கோட்ட கண்காணிப்பாளர் தகவல்

செங்கல்பட்டு, மே 23: செங்கல்பட்டு மாவட்டத்தில் அஞ்சல்துறை இன்சூரன்ஸ் முகவராக பணிபுரிய விரும்புவோர் விண்ணப்பிக்கலாம், என்று கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் சண்முகசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டத்தில் அஞ்சல்துறையின் இன்சூரன்ஸ் பிரிவில் முகவர்களாக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. செங்கல்பட்டு கோட்டத்தில் உள்ள ஜிஎஸ்டி சாலை, ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, மாடம்பாக்கம், காயரம்பேடு, மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில், மகேந்திர வேர்ல்டு சிட்டி, செங்கல்பட்டு நகரம் கல்பாக்கம், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், கருங்குழி, அச்சிறுப்பாக்கம், திருப்போரூர், மாமல்லபுரம், செய்யூர், கடப்பாக்கம் ஆகிய பகுதிகளில் இன்சூரன்ஸ் முகவர்களாக பணிபுரிய நேரடி முகவர்கள் மற்றும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், ஊக்கத்தொகை அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மேலும், நேரடி முகவர்களுக்கு குறைந்தபட்ச வயது 18 முதல், அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. அதேபோல், ஒய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு வயது வரம்பு கிடையாது. மேலும், விவரங்களுக்கு செங்கல்பட்டு அஞ்சல் கோட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post செங்கல்பட்டு மாவட்டத்தில் அஞ்சல்துறை இன்சூரன்ஸ் முகவராக விண்ணப்பிக்கலாம்: கோட்ட கண்காணிப்பாளர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: