செங்கல்பட்டில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது

 

செங்கல்பட்டு, மே 27: செங்கல்பட்டில் 9 கிலோ கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். வெளி மாநிலங்களில் இருந்து கடத்தப்படும் கஞ்சா பொட்டலங்கள் இருசக்கர வாகனங்கள் மூலமாக செங்கல்பட்டு, மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கடத்தப்படுவதாக செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், செங்கல்பட்டு டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் உத்தரவின்பேரில் தாலுகா இன்ஸ்பெக்டர் புகழ் தலைமையில் எஸ்ஐ சதாசிவம், எஸ்எஸ்ஐ ரமேஷ், தலைமை காவலர்கள் ஜெகன், வெங்கடேசன், கண்ணன் மற்றும் காவலர்கள் பிரேம்குமார், கண்ணதாசன் ஆகியோர் செங்கல்பட்டு தனியார் கல்லூரி அருகே நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை நிறுத்தி அவரிடமிருந்த பையில் சோதனை செய்தனர்.

அதில், 5 பார்சல்கள் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வாலிபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில், மதுராந்தகம் அடுத்த சித்தாமூர் சரவம்பாக்கம் பகுதியை சேர்ந்த அருள்ராஜ் (28) என தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து அருள்ராஜை கைது செய்தனர். மேலும், 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர், செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post செங்கல்பட்டில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: