பஞ்சு மெத்தை குடோனில் தீ விபத்து

 

பூந்தமல்லி, மே 27: அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டு பகுதியில் தனியாருக்கு சொந்தமான பஞ்சு மெத்தை தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இங்கு பழைய பஞ்சு மெத்தைகளை கொண்டு வந்து அதை பிரித்து, புதிய பஞ்சு மெத்தை தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று இந்நிறுவனம் பூட்டப்பட்டிருந்தது. இதனிடையே பஞ்சு மெத்தை இருப்பு வைத்துள்ள குடோனில் தீப்பிடித்து எரிவதாக அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீசார் அம்பத்தூர் தொழிற்பேட்டை, மாதவரம், செங்குன்றம் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது, குடோனில் இருந்த பொருட்களில் மளமளவென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்தது. இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு சுமார் 2 மணி நேரம் போராடி தீயை முழுவதுமாக அணைத்தனர். இதில், குடோனில் இருந்த பஞ்சு மெத்தை உள்ளிட்ட பொருட்கள் முழுவதுமாக எரிந்து சாம்பலானது. இதுதொடர்பாக, அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post பஞ்சு மெத்தை குடோனில் தீ விபத்து appeared first on Dinakaran.

Related Stories: