பலாத்கார முயற்சியில் இளம்பெண் கொலை: வாலிபர் கைது

புளியங்குடி: தென்காசி மாவட்டம் புளியங்குடி சிந்தாமணி முத்து மாரியம்மன் கோவில் 9வது தெருவில் மாரியம்மாள் என்பவர் தனது மகள் மகாலட்சுமியுடன் (22) தனியாக வசித்து வருகிறார். மகாலட்சுமி புளியங்குடியில் உள்ள கடையில் வேலை செய்து வந்தார். கடந்த 17ம் தேதியன்று இரவு வேலை முடிந்து மகாலட்சுமி வீடு திரும்பாததால் மாரியம்மாள், அவரது உறவினர் வீடுகளில் தேடினார். ஆனால் கிடைக்கவில்லை. மேலும், மகாலட்சுமியின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 18ம் தேதி காலை சிந்தாமணியில் உள்ள மாரியப்பன் (42) என்பவரது தோட்டத்தில் மகாலட்சுமி சடலமாக கிடப்பது தெரிந்தது.

அங்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து அங்கு உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதில், மகாலட்சுமியை ஒரு நபர் பின்தொடர்ந்து செல்வது தெரியவந்தது. அவர் சிந்தாமணி அம்பேத்கர் 9வது தெருவைச் சேர்ந்த முருகன் மகன் கருப்பசாமி (35) என்பது தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சம்பவத்தன்று மகாலட்சுமியை வழிமறித்து கருப்பசாமி உறவுக்கு அழைத்துள்ளார். ஆனால் அவர் மறுத்ததால் வயலில் உள்ள நீரில் முழ்கடித்து கொலை செய்தது தெரியவந்து உள்ளது. இதையடுத்து கருப்பசாமியை போலீசார் கைது செய்தனர்.

The post பலாத்கார முயற்சியில் இளம்பெண் கொலை: வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: