விண்ணப்பங்களை டிசம்பர் 29ம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் டிசம்பர் 31ம் தேதி இரவு 11.59 மணி வரை திருத்தம் செய்யலாம். தேர்வுக்கான கணினி வழி தேர்வு பிப்ரவரி 7ம் தேதி நடைபெறுகிறது. 7ம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை முதல் தாள் தேர்வும்(பட்டயப்படிப்பு தரம்), பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இரண்டாம் தாள் தேர்வும் நடைபெறும். அதாவது பகுதி ‘‘அ”வில் கட்டாய தமிழ் மொழி தகுதி தேர்வும்(10ம் வகுப்பு தரம்), பகுதி ‘‘ஆ” பொது அறிவு(10ம் வகுப்பு தரம்) தேர்வும் நடக்கிறது. கணினி வழி தேர்வு சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், வேலூர் ஆகிய 7 மாவட்டங்களில் நடைபெறும். இதற்கான கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு கட்டணம் உள்ளிட்ட முழு விவரங்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
The post வேளாண்மை, தோட்டக்கலை துறையில் உதவி அலுவலர் பணிகளில் 263 காலிப்பணியிடம்: விண்ணப்பிக்க டிசம்பர் 24ம் தேதி கடைசி நாள்; டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு appeared first on Dinakaran.
