முதல் முறையாக கேப்டனாக செயல்பட உள்ள சூரியகுமாருடன், ருதுராஜ், ஜெய்ஸ்வால், அக்சர், சுந்தர், விக்கெட் கீப்பராக இஷான், பிரசித், திலக் வர்மா, ஷிவம் துபே என சர்வதேச அனுபவமுள்ள வீரர்கள் களத்தில் கை கொடுக்க காத்திருக்கின்றனர். அதே சமயம் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸி. அணியில் பாதிப்பேர் கோப்பையுடன் நாடு திரும்புகின்றனர். மேத்யூ வேடு தலைமையிலான ஆஸி. அணியில் உலக கோப்பையில் விளையாடிய ஸ்மித், ஹெட், மேக்ஸ்வெல், அபாட், இங்லிஸ், ஸ்டாய்னிஸ், ஸம்பா இடம் பெற்றுள்ளனர். உலக கோப்பை பைனலில் ஆஸி.யிடம் அடைந்த தோல்விக்கு, டி20 தொடரில் பழிதீர்க்குமா இந்தியா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்தியா: சூரியகுமார் (கேப்டன்), ருதுராஜ் கெயிக்வாட், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ஷிவம் துபே, இஷான் கிஷன், ஜிதேஷ் சர்மா, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான், முகேஷ் குமார்.
ஆஸ்திரேலியா: மேத்யூ வேடு (கேப்டன்), ஜோஷ் இங்லிஸ், மேத்யூ ஷார்ட், டிம் டேவிட், ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஆரோன் ஹார்டி, ஷான் அபாட், தன்வீர் சங்கா, நாதன் எல்லீஸ், ஜேசன் பெஹரண்டார்ப், ஆடம் ஸம்பா.
நேருக்கு நேர்
* இரு அணிகளும் இதுவரை 26 சர்வதேச டி20ல் மோதியுள்ளன.அவற்றில் இந்தியா 15-10 என முன்னிலை வகிக்கிறது (ஒரு ஆட்டம் ரத்து).
* இந்தியாவில் நடந்த 10 டி20 ஆட்டங்களிலும் இந்தியா 6-4 என ஆஸி.யை முந்தியுள்ளது.
* கடைசியாக மோதிய 5 டி20 போட்டியிலும் கூட இந்திய அணியே 3-2 என முன்னிலையில் உள்ளது.
* இந்தியா-ஆஸி இடையே பல ஆண்டுகள் ஒற்றை ஆட்டங்களை கொண்ட டி20 தொடரும், உலக கோப்பை தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் மோதியுள்ளன.
* இவை தவிர 7 டி20 தொடர்களும் நடந்துள்ளன. அவற்றில் இந்தியாவில் 4 தொடர்களும், ஆஸியில் 3 தொடர்களும் நடந்துள்ளன.
* தொடர்களை பொறுத்தவரையில் இந்தியா 3 தொடர்களை கைப்பற்றி உள்ளது. ஒரு தொடரை ஆஸி வசப்படுத்தியது. எஞ்சிய 3 தொடர்கள் டிரா.
* இந்த 7 தொடர்களில் 19 ஆட்டங்கள் நடந்துள்ளன. அவற்றில் 2 ஆட்டங்கள் ரத்து. எஞ்சிய 17 ஆட்டங்களில் இந்தியா 10-7 என முன்னிலையில் உள்ளது.
The post முதல் டி20 போட்டியில் இன்று இந்தியா-ஆஸி. மோதல் appeared first on Dinakaran.
