ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் என டெல்லிவரை செல்வதைவிட ஆளுநருடன் அமர்ந்து பேசுவது மக்கள் நலனுக்கு சிறந்தது: தமிழிசை சவுந்தரராஜன் சாடல்

புதுச்சேரி: பெரிய மாநிலங்களில் இருந்து கொண்டு புதுச்சேரியை குண்டுச்சட்டி எனக் கூறியதை வன்மையாக கண்டிக்கிறேன் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் வேந்தர்களாகினால், மாவட்ட தலைவர்கள் துணைவேந்தர்கள் ஆவார்கள். மாவட்ட தலைவர்கள் துணைவேந்தர்களானால் கல்லூரிகளில் ஊழல் நடைபெறும், அரசியல் சாயம் பூசப்படும். ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் என டெல்லிவரை செல்வதைவிட ஆளுநருடன் அமர்ந்து பேசுவது மக்கள் நலனுக்கு சிறந்தது. தெலுங்கானாவில் என்ன நடக்க வேண்டுமோ அது சரியாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.

The post ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் என டெல்லிவரை செல்வதைவிட ஆளுநருடன் அமர்ந்து பேசுவது மக்கள் நலனுக்கு சிறந்தது: தமிழிசை சவுந்தரராஜன் சாடல் appeared first on Dinakaran.

Related Stories: