மது விற்பனை 3 நாளில் ரூ.633 கோடி வசூல் போதை பழக்கத்தை ஒழிக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை


சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட டிவிட்டர் பதிவு:தமிழ்நாட்டில் தீபஒளி திருநாளில் மட்டும் சென்னையில் கட்டுப்பாடின்றி ஓடிய மகிழுந்து மோதியதால் இருவர், சத்தியமங்கலத்தில் மரத்தில் மகிழுந்து மோதி நால்வர் உள்பட குடிபோதையால் நிகழ்ந்த விபத்துகள் மற்றும் கொலைகளில் 20 பேர் உயிரிழந்திருப்பதாக காவல்துறையினரை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்திகள் வேதனையை அளிக்கின்றன.  மற்றொருபுறம், தீபஒளி திருநாள் மற்றும் அதற்கு முந்தைய 2 நாளில் தமிழ்நாட்டில் ரூ.633 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. பால்மனம் மாறாத சிறுவர்கள் கூட கஞ்சா போதைக்கு அடிமையாகும் அவலம் ஏற்பட்டிருக்கிறது. மதுபோதையில் நடைபெறும் விபத்துகள் மற்றும் கொலை உள்ளிட்ட குற்றச்செயல்கள் தான் தமிழகத்தின் அமைதிக்கு ஆபத்தாக உள்ளன. எனவே, தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்துவதுடன், கஞ்சா நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.

The post மது விற்பனை 3 நாளில் ரூ.633 கோடி வசூல் போதை பழக்கத்தை ஒழிக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: