காரமடை பகுதியில் கடும் பனிமூட்டம்

 

மேட்டுப்பாளையம், நவ.1: காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளான மருதூர், புங்கம்பாளையம், திம்மம்பாளையம், தேக்கம்பட்டி, வெள்ளியங்காடு தோலம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும், அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடும் மூடுபனி நிலவி வருகிறது.

அதிகாலை முதலே மேகமூட்டத்துடன் காணப்பட்டு வரும் நிலையில் கடும் மூடுபனி காரணமாக இதமான சூழல் நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் அருகில் நிற்பவர்கூட தெரியாத அளவிற்கு பனி நிலவி வருகிறது. மேலும், விபத்துக்கள் ஏற்படுவதை தவிர்க்க வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு ஊட்டியைபோல் காரமடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மூடுபனி நிலவியதால் இதமான சூழலை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

The post காரமடை பகுதியில் கடும் பனிமூட்டம் appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.