ரோடு, பாலங்களில் பைக் ரேஸ், ரீல்ஸ்

 

கோவை, ஜூன் 21: கோவை நகரில் பல்வேறு பகுதி ரோட்டில் வாலிபர்கள் பைக் ரேஸ் நடத்துவதாக தெரிகிறது. சமீபத்தில் ரேஸ் மற்றும் சாகசம் தொடர்பான ரீல்ஸ் இன்ஸ்டா கிராம் மற்றும் வாட்ஸ் அப் குழுக்களில் அதிகமாக பகிரப்பட்டிருந்தது. ரேஸ்கோர்ஸ், ராமநாதபுரம் பாலம், சுங்கம் பாலம் என பல்வேறு இடங்களில் பைக்கில் வாலிபர்கள் சாகசம் செய்து காட்டிருந்தனர்.

மதுக்கரை நீலம்பூர் பைபாஸ் ரோட்டிலும் இரவு நேரத்தில் பைக் ரேஸ் மற்றும் சாகசங்கள் நடக்கிறது. கரணம் தப்பினால் மரணம் என்ற நிலைமை இருந்தும் வலைதள பக்கங்களில் லைக் பெற வாலிபர்கள் இப்படி போட்டி போட்டு சாகச செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், வாகனத்தில் பதிவு எண்களை மறைத்தும் விபரீத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post ரோடு, பாலங்களில் பைக் ரேஸ், ரீல்ஸ் appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.