ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசியதாக கைதான ரவுடி நீதிமன்றத்தில் ஆஜர்


சென்னை: ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசியதாக கைதான ரவுடி கருக்கா வினோத்தை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். ரவுடி கருக்கா வினோத்தை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் மனு அளித்தனர். 3 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரும் மனு மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

சென்னையில் கவர்னர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய ரவுடியை, பாதுகாப்பு பிரிவு போலீசார் சுற்றி வளைத்தனர். எதற்காக பெட்ரோல் குண்டு வீசி, கவர்னர் மாளிகை மீது தாக்குதல் நடத்த முயன்றார் என்பது குறித்து, போலீசார் விசாரித்து வந்தனர். சென்னை கிண்டி, சர்தார் பட்டேல் சாலையில் உள்ள கவர்னர் மாளிகை முன், ரவுடி ஒருவர் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை பிடித்து, அந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

சர்தார் பட்டேல் சாலையில், நெடுஞ்சாலை துறை தலைமை அலுவலகம் உள்ளது. அந்த வழியாக கவர்னர் மாளிகை நோக்கி, மர்ம நபர் ஒருவர் நடந்து வந்துள்ளார். இவர், பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை எடுத்து வந்ததாக தெரிகிறது. இவர், பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை, கவர்னர் மாளிகை நோக்கி வீச முற்பட்டபோது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து விட்டனர்.

இரண்டு பாட்டில்களும் கவர்னர் மாளிகைக்கு வெளிப்புறம், சர்தார் பட்டேல் சாலையில் தடுப்புவேலிகள் அருகே விழுந்து உடைந்தன. பெட்ரோல் நிரப்பிய பாட்டில் ஒன்றின் திரியில் லேசான தீ மட்டும் இருந்தது. மர்ம நபரிடம் மேலும் இரண்டு பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கவர்னர் மாளிகையை சுற்றி எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்நிலையில் இன்று ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதான ரவுடியை போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணை நடைபெற்று வருகிறது.

 

 

 

 

 

The post ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசியதாக கைதான ரவுடி நீதிமன்றத்தில் ஆஜர் appeared first on Dinakaran.

Related Stories: