குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை, விநியோகம், பதுக்கலுக்கான தடைமேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு

சென்னை: குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை, விநியோகம், பதுக்கல் ஆகியவற்றுக்கான தடையை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. குட்கா, பான் மசாலாவை ஒழிக்க போலீசார், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருள்கள் உடல்நலத்திற்கு கேடு என்பதால், 2013 முதல் தமிழகத்தில் அதனை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குட்கா மீதான தடை 2013-ல் கொண்டுவரப்பட்டு ஆண்டுதோறும் நீட்டிக்கப்படுகிறது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்;
குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்பதால், விநியோகம், பதுக்கலுக்கான தடை அடுத்தாண்டு மே 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தால் புகையிலை பொருள்களை பறிமுதல் செய்வதோடு மட்டுமன்றி ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

The post குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை, விநியோகம், பதுக்கலுக்கான தடைமேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: